தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ல் மலையாளத்தில் வெளியான படம் ஏ.பி.சி.டி (அமெரிக்கன் பான் கன்பியூஸ்டு டெசி). இந்த படத்தை இயக்குனர் மார்ட்டின் பரக்கத் என்பவர் இயக்கியிருந்தார். படத்தின் கதைப்படி வெளிநாட்டில் சுகவாசியாக வசிக்கும் துல்கரை அவரது தந்தை இந்தியாவில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்த்துவிட்டு கட்டாயப்படுத்தி படிக்க அனுப்பி வைக்கிறார். அவரும் அவரது ஒன்றுவிட்ட சகோதரனும் இங்கே வந்து படிக்கும்போது நிறைய சிரமங்களை சந்திக்கின்றனர். அதன்பிறகு தந்திரமாக உபாயம் செய்து வெளிநாட்டுக்கு மீண்டும் திரும்பி செல்கின்றனர் என்பது தான் கதை. அதனால இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் அங்கே படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து அந்த படத்தில் பணியாற்றிய நடிகரும், கதாசிரியருமான தம்பி ஆண்டனி என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நியூ ஜெர்சியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்தி வந்தோம். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் நீடித்துக் கொண்டே சென்றது. இதனால் வீட்டின் உரிமையாளர் எங்கள் மீது கோபமானார். ஒரு நாள் திடீரென வீட்டிற்குள் நுழைந்த அவர் படக்குழுவினர் அனைவரையும் கெட்ட வார்த்தையால் திட்டி வெளியேறுங்கள் என்று கூறினார். அது மட்டுமல்ல வீட்டின் கீழ் தளத்திற்கு சென்ற அங்கிருந்த தன்னுடைய துப்பாக்கியை எடுத்து வந்தவர் பட குழுவினரை பார்த்து மிரட்டத் துவங்கினார். பலரும் அதிர்ந்து போய் காத்த துவங்கினார்கள்.
அந்த சமயத்தில் ஒரு அறையில் அமர்ந்திருந்த நடிகர் துல்கர் சல்மான் அடுத்த காட்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வீட்டு ஓனரை பார்த்ததும், யார் நீங்கள் உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று துல்கர் சல்மான் கேட்க, உடனே இங்கு இருந்து வெளியேறு என்று வீட்டு உரிமையாளர் கத்தியுள்ளார். “நான் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறேன்.. படப்பிடிப்பை முடிக்காமல் என்னால் வெளியேற முடியாது.. நீங்கள் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் கொடுக்காமல் வெளியேறுங்கள்” என்று துல்கர் சல்மான் கூறினார்.
இதனால் கோபமான வீட்டு உரிமையாளர் “நீ யாரா இருந்தாலும் எனக்கு அது பற்றி கவலை இல்லை. கெட் அவுட்” என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என பயந்த இயக்குனர் மார்ட்டின் பரக்கத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் இருவரும் இணைந்து துல்கர் சல்மானை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு ஒரு வழியாக அந்த வீட்டு உரிமையாளரை சமாதானப்படுத்தி மீதி படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பி வந்தோம்” என்று கூறியுள்ளார்.