பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அந்த ஒரே படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் நடிகை மதுபாலா (மது). அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மதுபாலா ஆடிப்பாடி நடித்த 'சின்ன சின்ன ஆசை' பாடல் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் பாடல். அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 33 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மலையாளத்தில் அந்த பாடல் வரியின் பெயரிலேயே 'சின்ன சின்ன ஆசை' என்கிற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக மதுபாலா நடித்துள்ளார்.
கதையின் நாயகனாக பிரபல நகைச்சுவை நடிகரம் சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பில் சிறப்பித்து வருபவருமான இந்திரன்ஸ் நடித்துள்ளார். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்தவர். இந்த சின்ன சின்ன ஆசை படத்தை இயக்குனர் வர்ஷா வாசுதேவ் என்பவர் இயக்கியுள்ளார். வாரணாசி பின்னணியில் இந்த படத்தில் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டு சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.