ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து ‛லூசிபர்' என்கிற படத்தை இயக்கினார். முதல் படமே ஹிட்டாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛எம்புரான்' உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது.
இந்த டிரைலரில் ஒரு காட்சியில் மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான கலாபவன் சாஜன் இடம் பெற்றிருந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் அளித்தது. காரணம் முதல் பாகத்தில் அவர் மோகன்லால் தரப்பு ஆட்களால் சுட்டுக் கொல்லப்படுவார். அப்படிப்பட்டவர் எப்படி இரண்டாம் பாகத்தில் இடம் பெற முடிந்தது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலாபவன் சாஜன் கூறும்போது, “இந்த இரண்டாம் பாகத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று பிரித்விராஜ் சொன்னபோது அதே ஆச்சரியம் தான் எனக்கும் ஏற்பட்டது. படத்தில் அதை அற்புதமாக கையாண்டு இருக்கிறார். அதனால்தான் நான் இந்த படத்தில் நடிப்பது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை ஆனால் டிரைலரில் என்னுடைய காட்சி வருமாறு இடம்பெற வைப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை..
இத்தனைக்கும் முதல் பாகத்தில் நான் இறந்து விட்டேன் என்பது உறுதி. என்னை நெற்றியில் சுட்டார்கள். இப்போது இரண்டாம் பாகத்தில் என் கதாபாத்திரம் பற்றி ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதுதான் பிரித்விராஜின் புத்திசாலித்தனம்” என்று கூறியுள்ளார். இவரும் நடிகராக இருந்து பிரித்விராஜ் போலவே இயக்குனராக மாறியவர் தான். பிரித்திவிராஜை கதாநாயகனாக வைத்து பிரதர்ஸ் டே என்கிற படத்தை இயக்கினார் கலாபவன் சாஜன். ஆனால் இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை என்பதால் அதைத்தொடர்ந்து நடிப்பின் பக்கமே திரும்பி விட்டார்.