நிவின்பாலி அல்ல.. அது நான் தான்.. ; தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சின் ரகசியத்தை உடைத்த நடிகர் | 'மாமன்' படம் மூலம் வசனகர்த்தாவாக மாறிய ஈரோடு மகேஷ்i | ஆகஸ்ட்டில் துவங்கும் 'சார்பட்டா பரம்பரை 2' படப்பிடிப்பு | பிளாஷ்பேக்: புதுக்கோட்டை தந்த புதுமை நாயகன் ஏ வி எம் ராஜன் | அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மதராஸி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னையில் ஆரம்பமானது. கடந்த வருடமே படப்பிடிப்பு முடிந்து வெளியாகி இருக்க வேண்டிய படம்.
சல்மான்கான் நடிக்க 'சிக்கந்தர்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார் முருகதாஸ். 'சிக்கந்தர்' படம் அடுத்த வாரம் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. அதன்பின் 'மதராஸி' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்க உள்ளார் முருகதாஸ்.
ஏப்ரல் மாத மத்தியில் ஆரம்பமாகும் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்களுக்கும் மேல் நடக்க வேண்டி இருக்கிறதாம். அதை முடித்த பின்பு படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம். இந்தப் படத்தை 'கஜினி' படத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் ஏஆர் முருகதாஸ். ஒரு பக்கம் காதலும், மறுபக்கம் ஆக்ஷனும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.