ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2'ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு ரஜினியை இயக்கப்போவது கார்த்திக் சுப்பராஜ்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ரஜினியை திடீரென சந்தித்து பேசினார்கள். அவர்களுடன் நெல்சனும் இருந்துள்ளார். தற்போது நடித்து வரும் படம், அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து இவர்கள் இணைந்து பேசியதாக கூறப்படுகிறது.
உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனது கடைசி படத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறார் என்றும், அந்தபடம் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும், அதில் கமல்ஹாசனும் நடிக்க ரஜினி விரும்புவதாகவும், அதற்கேற்ப ஒரு கதையை லோகேஷ், நெல்சன், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இணைந்து உருவாக்க வேண்டும் என்று ரஜினி விரும்புவதாகவும், அதனால் இந்த சந்திப்பு நடந்தாகவும் கூறப்படுகிறது.




