இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், 18வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி இன்று(மார்ச் 22) மாலை கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறும் 13 மைதானங்களிலும் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் டைபெறும் லீக் ஆட்டத்திற்கு முன்பு மாலை 6.30 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாடல்களை பாடுவதுடன் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமும் ஆடுகிறார்.