இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? |
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படமான 'எல் 2 எம்புரான்' படம் அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முன்பதிவு ஆன்லைன் இணையதளங்கள் மூலம் நேற்று காலையில் ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திலேயே ஒரு இணையதளத்தில் மட்டுமே 96 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. இதுவரையில் எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இவ்வளவு அதிகமான முன்பதிவு செய்யப்பட்டதில்லை.
அது மட்டுமல்ல 24 மணி நேரத்தில் அந்த ஒரு இணையதளத்தில் மட்டும் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஒரு இந்திய சாதனை என படக்குழு தெரிவித்துள்ளது.