இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், எஸ்ஜே சூர்யா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் இந்த வருட சங்கராந்திக்கு வெளிவந்த தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. அப்படத்தில் தமன் இசையில் இடம் பெற்ற பாடல்கள் ஹிட் ஆகவில்லை.
பாடல்கள் ஹிட் ஆகாதது குறித்த காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன் தெரிவித்திருந்தார். 'ஹுக் ஸ்டெப்ஸ்' இல்லாததும், நடன இயக்குனர்கள் சரியாக நடனம் அமைக்காததும் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற முடியாமல் போனது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தமனின் இந்தக் கருத்து படத்தின் நாயகன் ராம் சரணை கோபப்பட வைத்துள்ளது. அதனால், அவர் சமூக வலைத்தளத்தில் தமனை 'அன்பாலோ' செய்துள்ளதாக ராம் சரண் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமன் வெளிப்படையாக தெரிவித்துள்ள கருத்து, படக்குழுவினரை கோபப்பட வைத்துள்ளதாகத் தெரிகிறது.