டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கடுத்து சிம்புவின் 49வது படத்தை 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் கதாநாயகி, உடன் நடிக்கும் நடிகர்கள், நடிகையர் யார் என்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தில் ஹீரோ சிம்புவுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சந்தானம் நகைச்சுவையில் இருந்து விலகி நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.
சந்தானம் சினிமாவில் அறிமுகமானது சிம்பு படத்தில்தான். அதனால், இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் உள்ளது. இருந்தாலும் தனது படத்தில் சந்தானத்திற்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் இருந்தால் தானே பேசி நடிக்க வைப்பதாக சிம்பு சொல்லி இருக்கிறார். அதன்படி சந்தானத்திடம் பேசியுள்ளார் என்று தகவல். விரைவில் அறிவிப்புகள் வரலாம்.
சந்தானம் தற்போது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.