ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? |
80ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத படம் 'சில்க் சில்க் சில்க்'. கவர்ச்சி நடிகையாக சில்க் ஸ்மிதா கொடி கட்டிப்பறந்த காலத்தில் அவர் நாயகியாக நடிக்க அவர் பெயரிலிலேய தயாரான படம். இந்த படத்தில் சில்க்குடன் பானு சந்தர், ரகுவரன், ஜானி, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஒய்.வி.கோபிகிருஷ்ணன் இயக்கி இருந்தார். இதில் சில்க் 3 வேடங்களில் நடித்திருந்தார்.
இது ஒரு வைரம் கடத்தல் தொடர்பான கதை. அதில் நடக்கும் கொலை. கொலை செய்தவர் ஒருவர், ஆனால் சிக்க வைக்கப்படுபவர் வேறொருவர், உண்மை கொலையாளியை கண்டறியும் விதமாக திரைக்கதை அமைந்தது. போலீஸ் அதிகாரி ரகுவரன் நடித்தார். இந்த கதையில் பிரியா, மீனா, ஷீலா என்ற 3 கேரக்டர்களிலும் சில்க் ஸ்மிதா நடித்தார். அவர் இல்லாத காட்சிகளே படத்தில் இல்லை. படமும் வெற்றி பெற்றது. சில்க் ஸ்மிதாவின் கேரியரில் முக்கிய படமானது.