சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி | தனுஷ், சூர்யாவிற்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | ஹேமா கமிஷன் அறிக்கை : கேரள உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு |
முழு ஆண்டுத் தேர்வுகள் மும்முரமாக நடந்து வரும் நாட்கள் என்பதால் தற்போது வெளியாகும் புதிய படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த வாரம் மார்ச் 14ம் தேதி 9 படங்கள் வெளிவந்தன. ஆனால், இந்த வாரம் மார்ச் 21ம் தேதி நான்கு படங்கள் மட்டுமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“அஸ்திரம், எனை சுடும் பனி, பேய் கொட்டு, ட்ராமா” ஆகிய நான்கு படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி விக்ரம், துஷாரா விஜயன் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' வெளியாக உள்ளது. அதற்கடுத்து ஏப்ரல் 4ம் தேதி ஓடிடி தளத்தில் 'டெஸ்ட்' படம் நேரடியாக வெளியாகிறது. அந்த வாரம் தியேட்டர் வெளியீட்டிற்கான படங்கள் எவை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதற்கடுத்து ஏப்ரல் 10ம் தேதி அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி', தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' ஆகிய படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் மார்ச் 14ம் தேதியுடன் இதுவரையில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 60ஐத் தொட்டுள்ளது.