இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி | தனுஷ், சூர்யாவிற்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | ஹேமா கமிஷன் அறிக்கை : கேரள உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு | ஆஸ்தான மலையாள எழுத்தாளரின் மறைவுக்கு ராஜமவுலி இரங்கல் | வீர தீர சூரனில் எங்களுக்கு விக்ரம் தான் மேக்கப் மேன் : சுராஜ் வெஞ்சாரமூடு கலாட்டா | சபரிமலை தரிசனம் செய்த மோகன்லால் ; மம்முட்டி பெயரில் அர்ச்சனை |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'கல்கி 2898 ஏடி'. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்ற படம். இரண்டு பாகங்களாக வெளியாகப் போகும் படம் என்று ஆரம்பத்திலேயே சொன்னார்கள். முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பாகாமல் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் நாக் அஷ்வின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
“கல்கி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு அனேகமாக இந்த வருடக் கடைசியில் ஆரம்பமாகும். அதற்கான முன்கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். எப்போது சரியாக ஆரம்பமாகும் என்பதன் அறிவிப்பை பிரபாஸ் தேதிகளை உறுதி செய்த பின் அறிவிப்போம். ஆனால், இப்படத்தின் வேலைகள் நிச்சயமாக நடக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபாஸ் இப்படத்திற்குத் தேதிகளைக் கொடுக்கத் தள்ளிப் போடுகிறார் என்று ஒரு வதந்தி பரவியது. அதனால், நாக் அஷ்வின் வேறு ஒரு படத்தை அதற்குள் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது. அதற்காகத்தான் இப்படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார் நாக் அஷ்வின்.