சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் பிருத்விராஜ் சுகுமாரன். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். 2019ல் மோகன்லால் நடிக்க வெளிவந்த 'லூசிபர்' படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் பிருத்விராஜ். அதன்பின் மோகன்லால் நடித்த 'ப்ரோ டாடி' படத்தையும் இயக்கினார். மீண்டும் மோகன்லால் நடிக்க 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக 'எல் 2 எம்புரான்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
மார்ச் 27ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனரான பிருத்விராஜ், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்து, “எல் 2 எம்புரான்' படத்தின் டிரைலரை முதன்முதலில் பார்த்த நபர். அதைப்பார்த்த பிறகு நீங்கள் சொன்னதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். இந்த உலகம் எனக்கானது இது என குறிக்கிறது. என்றென்றும் உங்கள் ரசிகன். ஒஜி சூப்பர்ஸ்டார்” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.