'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் 2022ல் வெளிவந்த படம் 'பீஸ்ட்'. அப்படத்தில் இடம் பெற்ற 'அரபிக் குத்து' பாடல் உடனடி ஹிட் பாடலாக அமைந்தது. யு-டியூப் தளத்தில் மிக விரைவில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே 500 மில்லியன் பார்வைகளையும் கடந்தது.
லிரிக் வீடியோ முதலில் 500 மில்லியனைக் கடக்க, அடுத்த சில மாதங்களில் முழு வீடியோ பாடலும் 500 மில்லியனைக் கடந்தது. இரண்டு விதமான வடிவங்களும் 500 மில்லியனைக் கடப்பது இதுவே முதல் முறை.
தமிழ் சினிமா பாடல்களில் நான்கு பாடல்கள்தான் 500 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக உள்ளன. 'மாரி 2' படத்தில் யுவன் இசையில் வெளிவந்த 'ரவுடி பேபி' பாடலும், அடுத்து 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற இந்த 'அரபிக்குத்து' பாடலும், 'எனிமி' படத்தில் இடம் பெற்ற 'டம் டம்' பாடலும், 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' ஆகியவைதான் அந்த நான்கு பாடல்கள்.
தற்போது 'அரபிக்குத்து' பாடலின் வீடியோ பாடல் 700 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.