அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் நடிப்பில் திரைக்கு வந்த படம் டிராகன். ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்துள்ளது. இதில் பல்லவி என்ற வேடத்தில் நடித்திருந்தார் கயாடு லோஹர். அதன்பிறகு இதயம் முரளி படத்தில் அதர்வாவுடன் நடித்து வருவதோடு மேலும் சில புதிய படங்களிலும் கமிட் ஆகப் போகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த டிராகன் படத்தில் நடிப்பதற்காக முதலில் என்னை தொடர்பு கொண்ட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, கீர்த்தி கேரக்டரில் நடிப்பதற்காக கதை சொல்லி இருந்தார். நானும் அந்த கதாபாத்திரம் பிடித்து போய் உற்சாகத்தில் இருந்தேன். ஆனால் அதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு என்னை தொடர்பு கொண்ட அவர், கீர்த்தி வேடத்தில் இன்னொரு நடிகை நடிப்பதாக சொன்னவர் பல்லவி வேடத்தில் என்னை நடிக்க வைக்கபோவதாக சொல்லி மீண்டும் கதை சொன்னார்.
கீர்த்தி கேரக்டரில் நடிக்க வைப்பதாக முதலில் சொன்னவர் பிறகு எதற்காக பல்லவி கேரக்டருக்கு என்னை மாற்றினார் என்று நான் குழப்பத்தில் இருந்தபோது, கதாபாத்திரத்தை மாற்றியதால் பீல் பண்ணாதே. இந்த பல்லவி வேடத்தில் உன்னை மக்கள் காதலிக்கும்படி வெளிப்படுத்தி காட்டுவேன் என்று உறுதி அளித்தார் இயக்குனர். அப்படி தான் சொன்னது போலவே டிராகன் படத்தில் என்னுடைய கேரக்டரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விட்டார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து என்று பதிவிட்டுள்ள கயாடு லோஹர், இந்த பல்லவி வேடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இயக்குனருக்கு எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.