ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவர் அறிமுகமான இந்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார். படமும் வெற்றி படமாக அமைந்ததால் ராசியான நடிகை என்கிற பெயரும் கிடைத்துவிட்டது. இதையடுத்து அதர்வாவுடன் இதயம் முரளி என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் கயாடு லோஹரின் பெயரில் சோசியல் மீடியாவில் குறிப்பாக பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைதளங்களில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன.
இதை கவனித்த கயாடு லோஹர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரசிகர்களுக்கு ஒரு அலர்ட் கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “சோசியல் மீடியாவில் என்னுடைய இந்த எக்ஸ் கணக்கு தவிர என் பெயரில் எந்த கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலிகள், அதில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் இந்த அதிகாரப்பூர்வ கணக்கின் மூலமாக சரியான நேரத்தில் உங்களுடன் சரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.