அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் | மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் |
தென்னிந்திய சினிமாவுக்கே தலைநகராக விளங்கியது சென்னை. ஏன், பல ஹிந்திப் படங்கள் கூட அந்தக் காலத்தில் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. சென்னையில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை சினிமா என்பது மக்களின் மிகப் பெரும் பொழுதுபோக்காக உள்ளது.
ஒரு காலத்தில் சென்னையில் பல பகுதிகளிலும் திறக்கப்பட்ட 40, 50 ஆண்டு கால பழைமையான தியேட்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் மயிலாப்பூர் பகுதியில் காமதேனு, அசோக் நகர் பகுதியில் உதயம் தியேட்டர் வளாகம் ஆகியவை மூடப்பட்டு இடிக்கப்பட்டும் விட்டன. அவற்றை அடுத்து வட சென்னையில் உள்ள இரண்டு முக்கியமான தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படுகின்றன.
தண்டையார் பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த எம்எம் தியேட்டர், பெரம்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீபிருந்தா ஆகிய தியேட்டர்கள் மூடப்படுவது அப்பகுதியில் உள்ள சினிமா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த் திறந்து வைத்த ஸ்ரீபிருந்தா தியேட்டர் மூடப்படுவது ரஜினி ரசிகர்களுக்கு வருத்தம்தான். அவரது ஒவ்வொரு படமும் கடந்த 40 வருட காலமாக திரையிடப்பட்டு வந்த ஒரு தியேட்டர்.
15 கிரவுண்ட் பரப்பளவில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் முதல் குளிர்சாதன வசதியுடன் 1,370 இருக்கைகளுடன் கட்டப்பட்டது. இந்த தியேட்டரில் முதல் படமாக காலையில் மோகன் நடித்த 'உதயகீதம்' மற்றும் அடுத்த 3 காட்சிகளுக்கு ரஜினிகாந்த் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' திரையிடப்பட்டது. இந்தத் திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த 'மாப்பிள்ளை' படம் அதிகபட்சமாக 244 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. கடைசியாக 'டிராகன்' திரையிடப்பட்டு கடந்த 9-ம் தேதியுடன் தனது 40 வருட பயணத்தை முடித்துக்கொண்டது.
பெரம்பூர் தியேட்டர் இடிக்கப்பட்டு அங்கு பிரம்மாண்ட குடியிருப்பு வரப்போவதாகச் சொல்கிறார்கள். ஒரு பக்கம் தியேட்டர்கள் மூடப்பட்டு வந்தாலும் மறுபக்கம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.