அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் | மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் |
சிம்பொனி இசையமைத்து சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய பயோபிக் படத்தின் துவக்க விழா சென்னையில் கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்றது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க படத்தின் அறிவிப்பை சில போஸ்டர்களுடன் வெளியிட்டனர். துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனால், அதன்பின் படம் பற்றிய எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் தான் இப்படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறார் என்றும் சொன்னார்கள். கடந்த வருடக் கடைசியில் இப்படம் 'டிராப்' ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தை இணைந்து தயாரிப்பதாக இருந்த ஒரு நிறுவனம் பட்ஜெட்டைக் காரணம் காட்டி விலகியதாகவும் சொன்னார்கள்.
இந்நிலையில் இப்படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி.யான ரவிக்குமார் டில்லியில் தனுஷை சந்தித்தது குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “டில்லி விமானத்தில் பயணித்தபோது அதே விமானத்தில் பயணித்த நடிகர் தனுஷ் அவர்களோடு தலைவரும் நானும் உரையாடினோம். இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் எந்த நிலையில் உள்ளது எனக் கேட்டபோது இன்னும் அந்த ப்ராஜெக்ட் இறுதி செய்யப்படவில்லை என்றார். இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக வந்ததாகக் கூறினார். இந்தியிலும் பாடுவீர்களா எனக் கேட்டேன். ஆமாம் என்றார். அவர் தமிழில் பாடியது நன்றாக இருந்தது.
இந்தப் படங்கள் டில்லி விமான நிலையத்தில் கடந்த திங்கள் கிழமை எடுத்தவை. பார்லிமென்ட் பணிகளின் நெருக்கடியில் இவற்றை பகிர மறந்துவிட்டேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் 'இளையராஜா' படம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது என்று தனுஷ் சொன்ன தகவல் வெளியாகி உள்ளது. படம் அறிவித்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் இன்னும் ஆரம்பமாகாமல் இருப்பது இளையராஜாவின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.