என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தங்கமணி என்பவர் இயக்க புதுமுகங்கள் நடிக்கும் பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்துள்ளார் மூத்த நடிகை லதா. சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசுகையில் ''உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகம் ஆனேன். கடந்த 52 ஆண்டுகள், தமிழ், தெலுங்கு உட்பட 250க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். இப்போது நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்கிறேன். பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்து இருக்கிறேன்.
இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அது அவர் பாடிய கடைசி பாடல். அவர் சொன்னதால் தான் இந்த கேரக்டரில் நடித்தேன். குளிரில் சரியான உடை கிடைக்காமல், பாடல் காட்சியில் தவித்ததாக ஹீரோ சொன்னார். எனக்கும் அப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்து இருக்கின்றன. என்.டி.ராமாராவ் படத்தில் நடித்தபோது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது. எனக்கு உடை செட்டாகவில்லை. அந்த கடும் குளிரில் கஷ்டப்பட்டு நடித்தேன். அந்த காலத்தில் படங்கள் தியேட்டரில் ஓடின. 200 நாட்கள் வரை ஓடின. இப்போது செல்போனில் ஓடுகின்றன. அதில்தான் அதிகம் பார்க்கிறார்கள்'' என்றார்.