பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் |
நடிகர்
பிரித்விராஜ் ஒரு பக்கம் பிசியான நடிகராக, இன்னொரு பக்கம் பிசியான
இயக்குனராக என இரட்டைக் குதிரை சவாரியை வெற்றிகரமாக செய்து வருகிறார்.
அவரது இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான
எம்புரான் படம் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வரும் மார்ச் 27ம் தேதி
வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் அவர் நீண்ட நாட்களாக நடித்து வந்த
'விலாயத் புத்தா' என்கிற படத்தின் படப்பிடிப்பையும் சமீபத்தில் நடித்து
முடித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு
தனது சோசியல் மீடியா பக்கத்தில் தாடியை எடுத்துவிட்டு கிளீன் ஷேவ் செய்த
முகத்துடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, “மீண்டும் நடிகராக உங்கள் முன்
தோன்ற இருக்கிறேன்.. அதேசமயம் என்னுடைய சொந்த மொழி அல்லாத இன்னொரு மொழியில்
நடிக்க இருப்பதால் கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறது” என்று
குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே அவர் மகேஷ்பாபு, ராஜமவுலி கூட்டணியில்
உருவாகும் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த
நிலையில் இவரது இந்த பதிவு அதை ஓரளவுக்கு உறுதிப்படுத்தியது.
இந்த
நிலையில் இந்த பதிவின் கீழ் சின்சி என்கிற ரசிகை ஒருவர், “இது
பிரித்விராஜின் புகைப்படம் அல்ல.. அவரது ஏஐ செய்யப்பட்ட புகைப்படம்..
யாரும் நம்பாதீர்கள்” என்று கமெண்ட் போட்டிருந்தார். உடனே பிரித்விராஜின்
அம்மா மல்லிகா சுகுமாரன், அவரது கருத்துக்கு பதில் தெரிவிக்கும் விதமாக,
“இது ஏ ஐ செய்யப்பட்ட புகைப்படம் அல்ல.. ராஜமவுலி படத்தில் அவன் நடிக்கப்
போகிறான்.. இன்று இரவு கிளம்புகிறான்” என்று தன்னை அறியாமல் அந்த தகவலை
உறுதிப்படுத்தி விட்டார்.