‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
'இங்க நான்தான் கிங்கு' படத்தை அடுத்து சந்தானம் நடித்துள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. ஏற்கனவே சந்தானம் நடிப்பில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக கீதிகா நடித்துள்ள நிலையில் இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் கஸ்தூரி, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஆப்ரோ என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடலின் மூலம் சந்தானம் இந்த படத்தில் திரைப்பட விமர்சகராக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரவீந்தர் சந்தானத்தை பார்த்து, முடிந்தால் என்னுடைய படத்தை விமர்சனம் செய்து பார் என்று சவாலாக பேச, அவரது படத்தை சந்தானம் விமர்சனம் செய்வது போன்ற காட்சிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த சிங்கிள் பாடல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.