சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
அசோக் செல்வன் நடிப்பில் 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. அதையடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து அவர், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனது அப்பா அம்மாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அஷ்வத் மாரிமுத்து. அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் பெற்றோரை சந்தித்தேன். மாரிமுத்து என்கிற தனபால். மேலும் அப்பா எங்கு போனாலும் போட்டுட்டு போற ஜோல்னா பை. சித்ரா எனது அம்மா. டிராகன் படம் வெளியானதும் என் பெற்றோரை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். காரணம் நான் பிளஸ் டூ முடித்த பிறகு அவர்கள் என்னை டாக்டராக பார்க்க விரும்பினார்கள். ஆனால் நான் இன்ஜினியரிங் மாணவராக இருந்தேன். அதற்காகத்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து.