யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
சமீபகாலமாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பாகவும் அதன் பிறகு இடைவேளை விட்டு மீண்டும் படம் தொடங்குவதற்கு முன்பாகவும் அதிக அளவிலான தனியார் விளம்பரங்கள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் தங்களிடம் புகாராக வந்த ஒரு வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பெங்களூருவில் உள்ள பிரபலமான ஐநாக்ஸ் திரையரங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை புகார்தாரருக்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
2023ல் ஒரு தம்பதியர் பெங்களூருவில் சாம் பகதூர் பகுதியில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் மாலை 4.05 மணி காட்சி பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்துள்ளனர். ஆனால் காட்சி 4.30 மணிக்கு தான் துவங்கியது. கிட்டத்தட்ட 25 நிமிட நேரம் தனியார் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதன் பின்னரே படம் துவங்கியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சம்பந்தப்பட்ட நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது நுகர்வோருக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய காரணத்திற்காக 20 ஆயிரம் ரூபாயும் வழக்கு உள்ளிட்ட செலவினங்களுக்காக 80 ரூபாயும் என ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என திரையரங்கு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக திரையரங்கில் 25 நிமிடம் ஓடிய விளம்பரங்களை மொபைலில் படம் பிடித்து நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பித்தார். இது பைரசி வீதிகளின்படி தவறு என தியேட்டர் நிர்வாகம் வாதிட்டது. ஆனாலும் ஆதாரத்திற்காக இப்படி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதை மட்டுமே புகார்தாரரால் படம் பிடிக்கப்பட்டது என்றும் திரைப்படம் அல்ல என்றும் கூறி தியேட்டரின் வாதத்தை நீதிமன்றம் ஒதுக்கி தள்ளியது.
அது மட்டுமல்ல அரசு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட வேண்டி இருக்கிறது என்ற தியேட்டர் தரப்பில் வைக்கப்பட்ட இன்னொரு வாதத்திற்கு பதில் அளித்த நீதிமன்றம், எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் ஒளிபரப்பி முடிக்க வேண்டுமே தவிர பொழுதுபோக்கிற்காக தானே படம் பார்க்க வருகிறார்கள், அவர்களுக்கு வேறு வேலை இருக்காது என்று நினைத்து அவர்களது நேரத்தை வீணடிக்க எந்தவிதமான உரிமையும் திரையரங்குகளுக்கு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குட்டு வைத்துள்ளனர்.