தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
திரைப்படங்களில் சிறைச்சாலை தொடர்பான காட்சிகள் அந்த காலத்தில் சென்னை மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டது. சினிமா படப்பிடிப்புக்கு என்று தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது புழல் சிறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதால் பெரும்பாலும் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.
சேலம் மத்திய சிறைச்சாலையில் நடந்த ஒரே படப்பிடிப்பு மேஜர் சுந்தரராஜன் இயக்கிய 'இன்று நீ, நாளை நான்' என்ற படத்தின் படப்பிடிப்பு தான். இந்தப் படம் சி.ஏ.பாலன் எழுதிய 'தூக்குமர நிழலில்' என்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்த நாவலில் பாலன், சேலம் மத்திய சிறையில் நடந்த பல சம்பவங்களை எழுதியிருந்தார். காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உரிய அனுமதி பெற்று சேலம் சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. சேலம் ஆத்தூர் சாலையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான எல்.ஆர்.சண்முகத்தின் வீடு சிவக்குமாரின் வீடாக மாற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
இப்படத்தில் சிவகுமார், ஜெய்சங்கர், லட்சுமி, சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர். டி.எஸ்.விநாயகம் ஒளிப்பதிவு செய்து இருந்தார்; இளையராஜா இசையமைத்திருந்தார். சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்திற்கு பிறகு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய இரண்டாவது படம் இது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை.