மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1945ல் வெளியான பிரம்மாண்ட படம் 'ஸ்ரீ வள்ளி'. முருக கடவுள் வள்ளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட வரலாறு சொல்லும் இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது தியாகராஜ பாகவதர். ஆனால் அவர் அப்போது பிஸியாக இருந்ததால் அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை இதனால் டி ஆர் மகாலிங்கம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஸ்ரீவள்ளி படம் முடியும் வரை வேறு எந்த படங்களிலும் நடிக்க கூடாது என்று அவருடன் ஏவிஎம் ஒப்பந்தம் செய்தது. அவரும் தன் பங்கிற்கு ஒரு நிபந்தனை விதித்தார்; முன்னணி நடிகையை தான் எனக்கு ஜோடியாக போட வேண்டும் என்றார்.
முதலில் வசுந்தரா தேவி நடிப்பதாக இருந்தது. ஆனால் அதனை டி. ஆர். மகாலிங்கம் ஏற்கவில்லை. இதனால் அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த குமாரி ருக்மணி தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் நடிக்கும் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதனால் ஏவிஎம் நிறுவனத்திற்கு குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்வதில் பிரச்சனை இல்லை.
படம் முடிந்ததும் படத்தை போட்டு பார்த்த ஏ வி எம் செட்டியாருக்கு திருப்தி ஏற்படவில்லை. டி ஆர் மகாலிங்கத்தின் குரலுக்கு ஈடாக குமாரி ருக்மணியின் குரல் அமையவில்லை. இதனால் அன்றைய சூழ்நிலையில் அறிமுகமாகி இருந்த பின்னணி இசை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குமாரி ருக்மணியின் பாடல்களை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக பி ஏ பெரிய நாயகியின் பாடலை பதிவு செய்தார். அந்த வகையில் முதல் பின்னணி பாடல் இடம் பெற்ற படமாக 'ஸ்ரீ வள்ளி' அமைந்தது. பி ஏ பெரியநாயகி முதல் பின்னணி பாடகி ஆனார்.
தனது குரல் சரி இல்லை என்று கூறி தான் பாடிய பாடல்களை நீக்கிவிட்டு பி ஏ பெரிய நாயகியின் குரலை பயன்படுத்தியதால் குமாரி ருக்மணி கோபம் அடைந்தார். இதை உணர்ந்து கொண்ட ஏவிஎம் நிறுவனம் அவருக்கு பெரும் தொகை கொடுக்க முன் வந்தது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத ருக்மணி, ஏவிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த அனைத்து படங்களிலிருந்தும் விலகினார்.
ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்து குமாரி ருக்மணி தன்மானத்துடன் நடந்து கொண்டது அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டது.