ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சினிமா உள்ளிட்ட இந்திய பொழுதுபோக்கு துறையின் மாநாடு (பிக்கி) சென்னையில் வருகிற 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கும் இந்த மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்கிறார். கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதுகுறித்து மாநாட்டு குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் பொழுதுபோக்கு துறை கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இதில் பிராந்திய மொழிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவுகளின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான ஒரு முக்கிய மேடையாக இந்நிகழ்ச்சி அமையும். இத்துறையில் இந்தியாவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தூண்டுகோலாக இது திகழும்.
இரண்டு நாள் மாநாட்டில் பொழுதுபோக்கு துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த அமர்வுகள், கலந்துரையாடல்கள், பட்டறைகள், சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.