இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். என்றாலும் சில படங்களில் அவரது கதாபாத்திரங்கள் கத்தரிக்கப்பட்டது போன்ற சில விஷயங்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் காஜல் அகர்வால்.
சிரஞ்சீவி உடன் அவர் நடித்த ஆச்சார்யா என்ற படத்தில் கதை ஓட்டத்துக்கு இடையூறாக இருப்பதாக சொல்லி அவர் நடித்த பெரும்பாலான காட்சிகளை கத்தரித்து படத்தை வெளியிட்டார்கள். அதன்பிறகு பாலகிருஷ்ணா உடன் நடித்த பகவந்த் கேசரி என்ற படத்தில் குறைவான காட்சிகளே கொடுத்து அவரை குணச்சித்ர நடிகையாக்கி விட்டார்கள்.
பின்னர் நாகார்ஜுனாவுடன் பேய் என்ற படத்தில் கமிட் ஆனார். ஆனால் அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் விலகினார். இதேப்போல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன்- 2 படத்தில் அதிக எதிர்பார்ப்போடு நடித்தார். ஆனால் பல பிரச்னைகளை கடந்து அந்த படம் வந்தது. ஆனால் அதில் காஜல் நடித்த காட்சிகள் இல்லை, மாறாக அவரின் காட்சிகளை இந்தியன் 3க்கு மாற்றினர்.
இப்படி திருமணத்துக்கு பிறகு சீனியர் நடிகர்களின் படங்களில் நடித்த போதும் அவரது காட்சிகள் கத்தரிக்கப்பட்டது மற்றும் படங்கள் தாமதமானது போன்ற விஷயங்களால் காஜலின் சினிமா கேரியர் பாதிக்கப்பட்டுள்ளது.