வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாட்டர் பாக்கெட்' | பிளாஷ்பேக்: மறைந்த நடிகை சரோஜா தேவியின் மறக்க முடியாத 50வது திரைப்படம் “இருவர் உள்ளம்” |
சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் விடாமுற்சி, 'பிரேக்டவுன்' என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று ரசிகர்கள் கணித்து சொல்லிவிட்டார்கள். ஹாலிவுட்டோ, கொரியனோ எந்த மொழி படத்தை காப்பி அடித்தாலும் ரசிகர்கள் கண்டுபிடித்து அதை வெட்டவெளிச்சமாக்கி விடுவார்கள். காரணம் இப்போது அவர்கள் ஓடிடி தளங்கள் மூலம் உலக படங்களை பார்த்து வருகிறார்கள். சினிமா பற்றிய தேடலும் அதிகம். ஆனால் அந்த காலத்தில் அப்படியில்லை ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கி சான் படங்கள் முக்கியமான சில படங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகும். அதுவும் ஆங்கிலத்தில்தான் வெளியாகும்.
இப்படியான காலகட்டத்திலேயே சிவாஜி நடிப்பில் வெளியான 'கருடா சௌவுக்யமா' என்ற படம் ஹாலிவுட்டில் வெளியான 'காட்பாதர்' படத்தின் தழுவல் என்று கண்டுபிடித்து சொல்லிவிட்டார்கள். கதைப்படி சிவாஜி பகலில் ஒரு அச்சகம் நடத்துவார், இரவில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பவர்களின் வீட்டுக்குள் புகுந்து அதை கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு கொடுத்து விட்டு வருவார். இது அவரது குடும்பத்துக்கே தெரியாது. தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
'காட்பாதர்' படத்தின் மைய கருதான் இந்த படத்தின் கதை. மற்றபடி திரைக்கதை நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதப்பட்டிருக்கும். சிவாஜியுடன் சுஜாதா, தியாகராஜன், அம்பிகா, மோகன், ராஜலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். வியட்நாம் வீடு சுந்தரம் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார், கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி இருந்தார்.