டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு கோவில் கட்டுவதற்கு முன்பாகவே ஒரு நடிகையின் பெயரால் ஆடை அணிகலன்கள் பிரபலமானது என்றால் அது நடிகை நதியாவின் வரவுக்கு பின்பு தான். நடிப்புக்கு தீனி போடுகின்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக தன்னை பதிவு செய்து கொண்டவர் நதியா. இவர் மலையாளத்தில் முதன்முறையாக இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1984ல் நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
பாட்டிக்கும் பேத்தியும் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தி உருவான முதல் படம் என்று கூட இதை சொல்லலாம். தனது முதல் படத்திலேயே மோகன்லால் மற்றும் பத்மினி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற நதியா இந்த பிப்ரவரி மாதத்தில் தனது 40 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார்.
இந்த படம் தான் பின்னர் தமிழில் 1985ல் பூவே பூச்சூடவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இடையில் சில வருடங்கள் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த நதியா தற்போது மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் தயக்கமின்றி நடிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் தாமிரபரணி ஆகிய படங்கள் அவரது ரீ என்ட்ரிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.




