தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

திருச்சியில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். அப்படியே அதே டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். இடையில் எம்பிஏவும் படித்து முடித்தவர், 2012 பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்த 'மெரினா' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அதன்பின் “எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், மாவீரன்,' என வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் 10 பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன் சினிமாவில் வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகிறது. இப்போது அவர் 24 மற்றும் 25வது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 25வது படமாக 'பராசக்தி' படம் உருவாகி வருகிறது.
சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், தனது திறமையால், கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறியுள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள ஒருவராக இருக்கிறார்.




