அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் |
2025ம் வருடப் பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் வெவ்வேறு மூன்று நாட்களில் படங்கள் வெளிவந்தன. மொத்தமாக வெளிவந்த ஆறு ஜனவரி 12ம் தேதி 'மத கஜ ராஜா', ஜனவரி 14ம் தேதி 'நேசிப்பாயா' படங்கள் வெளிவந்தன. பொங்கல் படங்களில் 'மத கஜ ராஜா' படம் மட்டுமே 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூலில் லாபம் தந்த படமாக அமைந்தது.
தற்போது 'மத கஜ ராஜா, நேசிப்பாயா' ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளன. 'நேசிப்பாயா' படம் 'பிரேமிஸ்தாவா' என்ற பெயரில் ஜனவரி 30ம் தேதியும், 'மத கஜ ராஜா' படம் அதே பெயரில் ஜனவரி 31ம் தேதியும் வெளியாக உள்ளன.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் தெலுங்கு ரசிகர்களிடத்திலும் பிரபலமானவர்கள். அதனால், தமிழில் கிடைத்ததைப் போல தெலுங்கிலும் 'மத கஜ ராஜா' படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. 'நேசிப்பாயா' படம் புதுமுக நடிகரான ஆகாஷ் முரளி நடித்துள்ள படம். இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன், பவன் கல்யாண் நடித்த 'பாஞ்சா' படத்தை இயக்கியவர். த்ரில்லர் படம் என்பதால் ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது. ஆனால், இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை. இரண்டு படங்களும் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.