ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வாரம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் 'விடாமுயற்சி'.
இப்படம் 1997ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'பிரேக்டவுன்' என்ற படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பது படம் வந்த பிறகு தெரிந்துவிடும்.
வெளிநாடுகளில் 'விடாமுயற்சி' படத்திற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான முன்பதிவு இணையதளங்களில் இப்படத்தின் கதைச்சுருக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“திருமணமான ஒரு தம்பதியரின் பயணத்தில், மனைவி காணாமல் போய்விடுகிறார். காணாமல் போன மனைவியை வெறித்தனமாகத் தேடுகிறார் கணவன். அதே நேரத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிரி பல தடைகளை உருவாக்குகிறான்,” என கதைச் சுருக்கம் இருக்கிறது.
ஆக்ஷன், அட்வெஞ்சர் படமாக இப்படம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்களுக்கும் அது தெரிந்திருக்கும். ஒரு அதிரடிப் படத்தை இன்னும் ஒரு வாரத்தில் நாம் பார்த்து ரசிக்கலாம்.