தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
1943ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் கன்னடத்தில் தயாரித்த படம் 'சத்ய ஹரிச்சந்திரா'. ஆர்.நாகேந்திர ராவ் இயக்கி நடித்தார். சுப்பையா நாயுடு, லட்சுமிபாய் உள்ளிட்ட பலர் நடித்தனர். அனைவரும் கன்னட நடிகர்கள். ஆர்.சுதர்சனம் இசை அமைத்திருந்தார், கிருஷ்ண அய்யர் ஒளிப்பதிவு செய்தார். படம் தயாரானதும் அதை போட்டு பார்த்த மெய்யப்ப செட்டியார் இதே படத்தை தமிழில் தயாரிக்க விரும்பினார்.
அப்போது ஏவிஎம் நிறுவனத்தில் சீனியர் ஆடியோகிராபராக இருந்தவர் ஏ.எல்.ராகவன் “தனியாக தயாரிக்க வேண்டாம். இப்போது 'டப்பிங்' என்ற புதிய தொழில்நுட்பம் வந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் பின்னணி இசையை மாற்றாமல் பேசும் வசனத்தை மட்டும் மாற்ற முடியும்” என்றார். ஆனால் இதனை மெய்யப்ப செட்டியார் நம்பவில்லை. இது சாத்தியமே இல்லை. கன்னட உச்சரிப்பு வேறு, தமிழ் உச்சரிப்பு வேறு என்றார்.
ஒரு ரீலை மட்டும் மாற்றிக் காட்டுகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் பின்பு முழு படத்தையும் மாற்றலாம் என்று ஒரு ரீலை டப் செய்தார். கன்னட வாயசைப்புக்கு ஏற்ற வார்த்தைகளை போட்டு வசனத்தில் மாற்றம் செய்தார். அது சரியாக அமைந்தது. ஆச்சர்யப்பட்ட மெய்யப்ப செட்டியார் முழுபடத்தையும் டப் செய்ய சொன்னார்.
பின்னர் தனது தொழிலாளர்கள், பொதுக்களுக்கு போட்டு காட்டி ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டார். அவர்கள் அசல் தமிழ் படம் போலவே இருப்பதாக சொன்னார்கள். பின்னர் படத்தை தியேட்டரில் வெளியிட்டார். படமும் வெற்றி பெற்றது. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த இந்த படமே தமிழில் முதல் டப்பிங் படம்.