துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 12ம் தேதி வெளிவந்த படம் 'மத கஜ ராஜா'. 12 வருடங்களாக முடங்கிக் கிடந்த படத்தை சில பல பஞ்சயாத்துக்களை முடித்து பொங்கலை முன்னிட்டு வெளியிட்டார்கள். எதிர்பார்க்காத விதத்தில் மற்ற பொங்கல் படங்களை விடவும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. கடந்த 10 நாட்களில் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
12 வருடப் படம், அவுட்டேட்டட் ஆன கதை என்று யாரும் பார்க்காமல் இரண்டரை மணி நேரம் சுவாரசியமாக ரசிக்க வைத்தார்கள் என்பதை மட்டும் ரசிகர்கள் பார்த்ததால் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறக் காரணமாக இருந்தது. படத்தின் வெற்றி காரணமாக சுந்தர் சி - விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.
தமிழில் வரவேற்பைப் பெற்ற இப்படம் ஜனவரி 31ம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது.