இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

2025ம் ஆண்டு பொங்கல் படங்களில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 12 வருடங்களாகத் தேங்கி நின்ற படமான 'மத கஜ ராஜா' படம் வெளிவந்து வரவேற்பைப் பெற்று 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சமி மற்றும் பலர் அப்படத்தில் நடித்திருந்தார்கள்.
சுந்தர் சி - விஷால் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 'மத கஜ ராஜா' படத்தின் வெற்றிதான் அதற்குக் காரணம். 'ஆம்பள, மத கஜ ராஜா, ஆக்ஷன்' ஆகிய மூன்று படங்களில் இணைந்த கூட்டணி மீண்டும் நான்காவது முறையாக இணைய உள்ளது. அந்தப் படமும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. அது குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
'துப்பறிவாளன் 2' படத்தை தயாரித்து, இயக்கி நடிக்க உள்ளார் விஷால். அப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த வேண்டும். அதற்கு சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. கவுதம் மேனன், அஜய் ஞானமுத்து ஆகியோரின் இயக்கத்திலும் விஷால் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சுந்தர் சி தற்போது 'கேங்கர்ஸ்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் வடிவேலு அவருடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார்.