ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
நடிகர் ஜெயம் ரவி, சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோ சென்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதோடு, தனது பெயரையும் ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். அடுத்தபடியாக தனது நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரித்து அதை தானே இயக்கி, நடிக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த படத்தில் அவரது மகன் ஆரவ் ரவியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு கடந்த 2018ம் ஆண்டு சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்த டிக் டிக் டிக் படத்தில் அவர் மகன் ஆரவ் ரவியும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தான் இயக்கும் படத்தில் மீண்டும் மகனை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார் ரவி மோகன். இந்த படத்திற்கான கதையை அவரது தந்தையான எடிட்டர் மோகன் எழுதியுள்ளாராம்.