துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
கடந்த ஆண்டு தமிழில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யாப், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் இந்தியாவை கடந்து சீனாவிலும் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்தது.
இந்நிலையில் நிதிலன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "சமீபத்தில் மும்பையில் அனுராக் மகள் திருமணத்தில் அவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜாண்ட்ரோ தன்னை அவர் படத்தில் நடிக்க அழைத்துள்ளதாகவும் அதற்கு காரணம் 'மகாராஜா' படம் தான் என்றும் கூறினார். இதை கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.