பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கடந்த 15 வருடங்களுக்கு மேல் அஜித் நடித்த படங்களை எடுத்துப் பார்த்தால் அவருக்கென ஒரு ஆஸ்தான இயக்குனர்கள் வட்டாரத்தை அவர் உருவாக்கி வைத்திருப்பதை கவனிக்க முடியும். அப்படி ஆரம்பத்தில் இயக்குனர் விஷ்ணுவர்தன், அதன் பிறகு சிவா, லேட்டஸ்ட்டாக எச். வினோத் இவர்களுடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கூட்டணி சேர்ந்து நடித்து வந்தார். அந்த வகையில் தற்போது ‛விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய படங்களை முடித்து விட்ட அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
சிலர் ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் மீண்டும் அவருடன் இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை வைத்து ‛நேசிப்பாயா' என்கிற படத்தை இயக்கியுள்ளார் விஷ்ணுவர்தன். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவரிடம் அஜித்தின் படத்தை இயக்குவீர்களா, ‛பில்லா 3'க்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஷ்ணுவர்தன், ‛‛பில்லா 3 திரைப்படத்திற்கு வாய்ப்பே இல்லை. அதே சமயம் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதற்கான பேச்சு நடைபெற்று வருகிறது. அதில் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார்,'' என்று புதிய அப்டேட் தகவலை கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
அஜித்தை வைத்து ‛பில்லா, ஆரம்பம்' படங்களை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.