புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். தெலுங்கில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ராஜா சாப் மற்றும் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஒரு நபர் மூலமாக சைபர் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளார் நிதி அகர்வால்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையில் தற்போது அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார் நிதி அகர்வால். அந்த புகாரில் அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட அந்த நபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய பெயரை களங்கப்படுத்தும் விதமாக தரக்குறைவான மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளதோடு அதற்கான ஆதாரங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் மலையாள நடிகை ஹனிரோஸ், இப்படி தன் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.