பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. இந்த படம் பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் மிஷ்கின் வந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த நித்யா மேனன் மிஷ்கினை பார்த்ததும் சந்தோஷ கூச்சலிட்டு அவரை அழைத்தார்.
பொதுவாகவே மிஷ்கின் தனது அன்பை வெளிப்படுத்துவதற்காக எதிரில் இருப்பவர்களை கட்டிப்பிடிப்பது வழக்கம். அதனை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, “தயவுசெய்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டாம்.. நான் முழுதாக ஆடை அணிந்து இருக்கிறேன்” என்று செல்லமாக உத்தரவு போட்டார் நித்யா மேனன். அதற்கு சம்மதித்த மிஷ்கினும் தனது முகத்தை கீழே இறக்கி காட்ட, நித்யா மேனன் அவரது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்த, பதிலுக்கு மிஷ்கினும் நித்யா மேனனின் கையில் முத்தம் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.