மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013ல் உருவான படம் மத கஜ ராஜா. ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப்படம் சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளியாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக வரும் ஜன., 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக அஞ்சலி, வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடியனாக நடித்து வந்த சந்தானம் கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சுந்தர்.சியுடன் இணைந்து இருந்தார்.
அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்கிற தகவலை சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி பகிர்ந்து கொண்டார். 2021ல் வெளியான அரண்மனை 3 படத்தில் தான் முதன்முறையாக சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இப்போது 2012-லேயே சுந்தர்.சி இயக்கத்தில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமான செய்திதான்.
அதற்கு முந்தைய வருடம்தான் விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்த அவன் இவன் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பின் காரணமாக மத கஜ ராஜாவிலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஆர்யாவை விஷால் அழைத்து வந்து விட்டார் என்று தெரிகிறது. இதே போல ஆர்யாவும், சந்தானமும் இணைந்து நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்கிற படத்தில் கெஸ்ட் ரோலில் விஷால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.