ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
டீசர், டிரைலர் ஆகியவைதான் திரைப்படங்களுக்கான வீடியோ முன்னோட்டமாக இருந்தது. படத்தில் நடிக்கும் ஹீரோவின் பிறந்தநாள் அல்லது பட அறிவிப்புக்காக தற்போது 'க்ளிம்ப்ஸ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். அவற்றைத் தமிழில் குறு வீடியோ என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
'கேஜிஎப் 2' படம் மூலம் சாதனை புரிந்த யஷ் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் 'டாக்சிக்' படத்தின் குறு வீடியோ ஒன்று நேற்று (ஜனவரி 8ம் தேதி) காலை வெளியானது. 24 மணி நேர முடிவில் அந்த வீடியோ 36 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 'புஷ்பா' படத்திற்காக 'வேர் இஸ் புஷ்பா' என்ற குறு வீடியோ 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வைகளைப் பெற்ற சாதனையைத் தற்போது 'டாக்சிக்' முறியடித்துள்ளது. தமிழைப் பொறுத்தவரையில் சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' படத்தின் குறு வீடியோ 20 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
'கேஜிஎப் 2' படம் வெளிவந்து சுமார் மூன்று ஆண்டுகளாகியும், அதற்குப் பின் யஷ் நடித்து எந்த ஒரு படமும் வெளிவராத நிலையிலும் அவருடைய பிரபலம் இன்னும் அப்படியேதான் உள்ளது.