Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனியர்களை விட ஜூனியர் ஹீரோக்கள் சிலர் ரொம்ப மோசம் ; பார்வதி ஓபன் டாக்

09 ஜன, 2025 - 01:01 IST
எழுத்தின் அளவு:
Actor-Parvathy-says-young-Malayalam-actors-are-worse-than-older-generation


மலையாள நடிகை பார்வதி தனக்கு மனதில் தப்பு எனப்படும் விஷயத்தை உடனடியாக சுட்டிக்காட்டி பேசி விடுவார். இதனாலேயே அவருக்கு மலையாள திரை உலகின் மறைமுகமான எதிர்ப்பு நிறைய இருக்கிறது. மேலும் தன்னைப் போன்ற சக நடிகைகள் சிலரை சேர்த்துக்கொண்டு சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை துவங்கி திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக பல பெண்கள் துணிச்சலாக வெளியே வந்து தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையிலும் புகார் அளித்தனர். இதில் பெரும்பாலும் சீனியர் நடிகர்கள் தான் இப்படி குற்றச்சாட்டுக்கு ஆளாகினர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வதியிடம் இது பற்றி கேட்டபோது, “சீனியர் நடிகர்களாவது கொஞ்சம் பரவாயில்லை. இன்றைய இளம் நடிகர்களில் சில பேர் இதைவிட ரொம்பவே மோசமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சீனியர் நடிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பு வசதி தங்களுக்கு கிடைக்கவில்லையே என்கிற வயிற்றெரிச்சலிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். (என்ன வாய்ப்பு, வசதி என்பதை பார்வதி குறிப்பிடுகிறார் என தெரியவில்லை) தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும் அது குறித்து அவர்களுக்கு துளியும் கவலை இல்லை. தரக்குறைவான வார்த்தைகளை சுலபமாக பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் இது போன்ற இளம் நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டி வந்துவிடுமோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். நல்ல வேலையாக அது போன்று நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

சொல்லப்போனால் மலையாளத்தில் அவர் கடந்த சில வருடங்களில் நடித்தது வெறும் இரண்டு மூன்று படங்களில் தான். அதுவும் முன்னணி ஹீரோக்களுடன் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்களை விட பார்வதி சீனியர் என்பதால் அவர் இளம் ஹீரோக்கள் என யாரை குறிப்பிடுகிறார் என்கிற விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஷங்கருக்கு 'சேஞ்ஜ்' தருமா 'கேம் சேஞ்ஜர்' ?ஷங்கருக்கு 'சேஞ்ஜ்' தருமா 'கேம் ... குறு வீடியோவில் சாதனை படைத்த 'டாக்சிக்' குறு வீடியோவில் சாதனை படைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
10 ஜன, 2025 - 08:01 Report Abuse
Barakat Ali அப்டி இன்னாக்கா பண்ட்டாங்க ???? உள்ள மசாலா திணிச்சு பெருச்சாளியைப் பிடிச்சு கட்டிட்டாங்களா ????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)