ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
இப்போது அஜித் குமார் நடித்திருக்கும் 'விடாமுயற்சி, குட்பேட் அக்லி' படங்களில் விடா முயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்வாங்கி விட்ட நிலையில், இதுவரை அந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் குட்பேட் அக்லி படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்து விட்டார்கள்.
இப்படியான நிலையில் தற்போது விடாமுயற்சி படம் ஜனவரி மாதம் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் அனைத்தும் ஓடி முடித்த பிறகு அஜித்தின் விடாமுயற்சி மட்டும் சிங்கிளாக களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது.