இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இயக்குனர் கே.சுப்ரமணியம். பவளக்கொடி, நவீன சாதரம், குசேலா, பாலயோகினி, சேவாதனம், தியாகபூமி, பிரகலாதா உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கியவர், நிறைய படங்களை தயாரிக்கவும் செய்தவர். சின்ன சின்ன வேடங்களிலும், சிறப்பு தோற்றங்களிலும் நடித்தார். ஆனாலும் அவர் நாயகனாக நடித்த படம் 'அனந்தசயனம்'. இந்த படத்தில் அவரது ஜோடியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமியை திருமணமும் செய்து கொண்டார். அவரே படத்தை தயாரித்து இயக்கினார்.
இவர்களுடன் பட்டு அய்யர், வித்வான் சீனிவாசன், உள்பட பலர் நடித்தார்கள். கமல்கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் அவர் காட்டிய சில மாயாஜால காட்சிகள் அப்போது பேசு பொருளாக இருந்தது. பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். திருவிதாங்கூர் சமஸ்தான ரகசிய அறையில் பாதுகாக்கப்படும் ஒரு முக்கியமான ஓலை சுவடியை அடிப்படையாக கொண்ட பேண்டசி திரில்லர் வகை படம். படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால் அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.