வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் 'ஐடன்டிட்டி'. டொவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடித்த இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. கோகுலம் சினிமா நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இந்த படத்தை அகில் பால், அனஸ்கான் இணைந்து இயக்கி உள்ளனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.
படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக நிகழ்வு நேற்று நடந்தது. இதில் நடிகை திரிஷா பேசியதாவது: முதன் முறையாக ஒரு மலையாளப் படத்தின் மேடையில் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாகவே மலையாளப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக உள்ளது. நான் நிறைய முறை சொல்லியுள்ளேன், எனக்கு மலையாளப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாள படங்கள் மீது நிறைய மரியாதை உள்ளது. வருடத்திற்கு ஒரு மலையாளப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் இந்த படத்தின் வாய்ப்பு வந்தது.
இந்த படத்தின் புத்திசாலித்தனமான திரைக்கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அகில் கதை சொன்ன விதமே பிரமாதமாக இருந்தது. டொவினோ மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம். அகில் சிரித்துக் கொண்டே இருந்தாலும் மிக சீரியஸாக வேலை செய்வார். வினய் ரொம்ப காலமாகத் தெரியும். இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் ஷூட் செய்யும் போதே வெற்றி பெறும் எனும் நம்பிக்கை இருந்தது. மலையாளத்தில் எப்போதும் பெண்களுக்கு நல்ல கேரக்டர்கள் எழுதுவார்கள். படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். என்றார்.