இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
பொதுவாகவே காதலர் தினத்தை குறிவைத்து ரொமான்டிக், காதல் படங்கள் வெளியாவது தான் வழக்கம். ஆனால் மம்முட்டி நடித்துள்ள ஆக்ஷன் படமான 'பஷூக்கா'வை வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் டினோ டென்னிஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் மலையாள சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பிரபல கதாசிரியராகவும் இயக்குனராகவும் பல வெற்றி படங்களை கொடுத்த மறைந்த கலூர் டென்னிஸ் என்பவரின் மகன் தான்.
கலூர் டென்னிஸின் பல ஹிட் படங்களில் மம்முட்டி நடித்திருப்பதால் அந்த நட்பின் அடிப்படையில் அவரது மகனுக்கு தன் படம் மூலம் இயக்குனராகும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதமே முடிவடைந்துவிட்டது. ஜனவரியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காதலர் தினத்தன்று வெளியாகிறது. இந்த படத்தில் கவுதம் மேனன், பாபு ஆண்டனி, ஜெகதீஷ், ஷைன் டாம் சாக்கோ, தமிழ் நடிகர் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.