துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
மலையாளத்தில் சில நாட்களுக்கு முன்பு இளம் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக அதே சமயம் அதிக அளவில் வன்முறை காட்சிகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தற்போது ஹிந்தியில் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து கொரிய நாட்டிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஹனீப் அதேனி என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டி, ஆர்யா இருவரையும் வைத்து தி கிரேட் பாதர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர். அதன் பிறகு நடிகர் நிவின்பாலியை வைத்து இரண்டு படம் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் மார்கோ திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. வழக்கமாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு உடனே அடிபட துவங்கிவிடும். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு தற்போது பரவத் துவங்கிய நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் பவர்புல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. விக்ரமும் இது போன்ற சவாலான கதாபாத்திரங்களை விரும்பி நடிப்பவர் என்பதால் ஒருவேளை இது உறுதியாக கூட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.