32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
1940களில் டி ஆர் ராஜகுமாரி உச்சத்தில் இருந்தபோது அவருக்கு போட்டியாக வந்தவர் வசுந்தரா தேவி. அழகு, பாடும் திறமை, நடிப்பு திறமை, நடனத் திறமை அனைத்துமே அவரிடம் இருந்தது. அந்த காலத்தில் துணிச்சலான நடிகை என்ற பெயர் பெற்றவர். அதற்கு ஒரு உதாரணம் அவர் ஒரு தயாரிப்பாளர் மீது தொடர்ந்த வழக்கு.
வசுந்தரா தேவி தனது மூன்றாவது படத்தில் நடிக்க தொடங்கினார். இதற்காக தயாரிப்பாளர் உடன் ஒப்பந்தமும் செய்திருந்தார். பாடி நடிக்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தில் ஒரு விதி. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்த படத்தில் இருந்து வசுந்தரா தேவி நீக்கப்பட்டார். வசுந்தரா தேவியின் குரல் சரியில்லை அதனால் அவர் பாடிய பாடல்களும் சரி இல்லை என்று அப்போது தயாரிப்பாளர் காரணம் என சொன்னார்.
படத்தில் இருந்து நீக்கப்பட்டது கூட வசுந்தராதேவிக்கு கவலை இல்லை, ஆனால் உன் குரல் சரியில்லை என்பது தான் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே ஒரு முடிவெடுத்தார். அந்தப் படத்தில் இவர் பாட வேண்டிய பாடல்கள் அனைத்தையும் தனியாக தனது சொந்த செலவில் ஒரு ஸ்டூடியோவில் பாடி பதிவு செய்தார். அதைக்கொண்டு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்தார். எனது குரல் அழகாகவும் இனிமையாகவும் இருக்கும்போது அது சரி இல்லை என்று அதே காரணமாக என்னை நீக்கியது செல்லாது என்று அவர் நீதிமன்றத்தில் வாதம் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'வசுந்தரா தேவியின் குரல் நன்றாக இருக்கிறது. அதை காரணம் காட்டி அவரை நீக்கியது செல்லாது' என்று தீர்ப்பளித்தது.
இதை தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் படத்தில் தொடர்ந்து நடிக்குமாறு வசுந்தரா தேவியை கேட்டுக்கொண்டார். ஆனால் வசுந்தரா தேவி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் நடிக்க மறுத்து அடுத்த மாதம் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்கள் தான் ஆல் இன் ஆல். அவர்கள் வைத்தது தான் சட்டம். முன்னணி நடிகர் நடிகைகள் கூட தயாரிப்பாளர் வந்தால் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அப்படியான காலத்தில் ஒரு தயாரிப்பாளரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற வசுந்தரா தேவியின் செயல் இன்றளவும் பேசப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் ஆளுமை செய்த வைஜெயந்தி மாலாவின் தாய் தான் இந்த வசுந்தரா தேவி.