32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் ' 7ஜி ரெயின்போ காலனி'. இந்த படம் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கும் பிடித்த படமாக உள்ளது.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தின் படப்பிடிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கினர். இந்த பாகத்தை செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகனாக நடித்து வந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவனுக்கும், ரவி கிருஷ்ணாவிற்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இப்படம் கைவிடப்பட்டதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
இவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விரைவில் படப்பிடிப்பை தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது செல்வராகவன், நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து 'மென்டல் மனதில்' படத்தை இயக்கி வருகிறார்.